crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டு யாட்வீதியின் கோட்டை பூங்காவில் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை திட்டம்

மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள யாட்வீதியின் கோட்டை பூங்காவில் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை; அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (22) இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்மொழிவில் முன்னெடுக்கப்படவுள்ள நடை பாதை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலில் மண்னினால் அமைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டு புதியயோசனை முன்வைக்கப்பட்டது.

மக்களின் நீண்ட கால பாவனைக்கு ஏற்புடைவகையில் கொங்கிறிட் கற்களினால் பாதை அமைப்பதற்கு என நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 42 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு 800 மீற்றர் தூரத்திற்கான பாதையை அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வீதி அபிவிருத்தி திணைக்களம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மாநகர முதல்வர் திட்டமிடல் பிரிவின் உதவிப்பணிப்பளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: