crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவிற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவிற்கு தேசிய இளைஞர் விளையாட்டு விவகார மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்~ இன்று முன்தினம் (23) விஜயம் செய்து பார்வையிட்டார்.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு சிகிச்சைப்பிரிவினைப் பார்வையிட்டார்.

போதனா வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொர்பாகவும் அமைச்சர் நாமல் ராஜபக் வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரன்ஜினி கணேசலிங்கம் உட்பட வைத்திய நிபுனர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இந் நிகழ்வின்போது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் தேனுக விதனகே, மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் உட்பட அரசியல் பிரமுகர்கள், வைத்திய நிபுனர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 + = 50

Back to top button
error: