12 முதல் 19 வயதுக்குட்பட்ட பிறவி நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நேற்று (24) கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுவர்களுக்கு மருத்துவமனைகளில் உள்ள கிளினிக்குகளில் பைஷர் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
பிறப்பு நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டமானது ஏனைய மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
12 முதல் 19 வயதுக்குட்பட்ட ஏனைய சிறுவர்கள் தடுப்பூசி நோக்கத்திற்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் சுமார் 50,000 சிறுவர்கள் பிறவி நோய்களுடன் உள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.