crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிறுவர்கள் தடுப்பூசி பெற்றதன் பின்னர் பிரச்சினை ஏற்படின் அறிவிக்கவும்

கொவிட் தடுப்பூசியின் பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பல்வேறு குறைபாடுகளையுடைய சிறுவர்களுக்கு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதன் பின்னர் ஏதாவது பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படின், கொழும்பு ரிட்ஜ்வே பெண்கள் மற்றும் சிறுவர் வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இதற்காக 070 270 3954 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்கள் செயற்படவுள்ளது.

தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டதன் பின்னர் பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், பெரசிற்றமோல் மாத்திரை ஒன்றை கொடுப்பது உகந்தது. பிள்ளைகளை களைப்படையும் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறும் சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களின் மத்தியில் கொரோனா பரவல் குறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. டெல்ட்டா திரிபு பரவலுடன் கொவிட் நோய்க்குள்ளான 200க்கும் அதிகமான சிறுவர்கள் ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். தற்போது இவர்களின் எண்ணிக்கை 50ஆக குறைவடைந்துள்ளதாக சிறுவர் வைத்திய சாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − = 34

Back to top button
error: