crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஞானசார தேரருக்கு எதிராக 7 முஸ்லிம் எம்.பி கள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (25) சனிக்கிழமை பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்இ பைசல் காசிம்இ நஸீர் அஹமட்இ எம்.எஸ்.தௌபீக்இ அலிசப்ரி ரஹீம்இ முஸாரப் முதுநபின் மற்றும் இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று ஞானசார தேரர் தெரிவித்தமை இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது இதனால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு ICCPR சட்டத்தின் கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − = 19

Back to top button
error: