முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த சா /தரத்தில் இரண்டு மாணவர்கள் 9A சித்தியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
செல்வி சுதர்சன் வேணுயா, செல்வி. அன்பழகன் மீனுயா ஆகிய இரு மாணவர்களும் 9A சித்தியடைந்துள்ளதுடன், மேலும் 47 மாணவர்களுக்குமேல் உயர்தரம் கற்றுக்கொள்ளக்கூடிய பேறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தினால் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தடைப்பட்ட போதும் குறித்த மாணவர்கள் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு இச் சாதனையை பதிவு செய்துள்ளார்கள்.
இம் மாணவர்களுடைய மேலதிக வகுப்பிற்கு தாய்ச்சங்கம் மற்றும் புலம்பெயர் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியன மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பக்கபலமாக செயற்பட்டுள்ளன.