(எம்.எல்.எஸ். முஹம்மத்)
வெளியாகியுள்ள 2020 கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இரத்தினபுரி அல்மக்கியா தேசிய பாடசாலையைச் சேர்ந்த 88 சதவீத மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் (27) தெரிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய 50 மாணவர்களில் 44 பேர் நேரடியாக உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் மாணவி தாஜுத்தீன் அப்ரா 8ஏ,1பி சித்தியையும், மாணவன் ஏ.ஆர்.உபைதுர் றஹ்மான் 7ஏ,1பி,1சீ சித்தியையும் பெற்று பாடசாலைக்கு பெருமையை பெற்றுத்தந்துள்ளனர் எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் சிறப்புடன் கல்வியைத் தொடர்ந்து திறமையாக சித்தியடைந்த மாணவர்களுக்கும் மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் மில்ஹான் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக அல் மக்கியா தேசிய பாடசாலை மாணவர்கள் அனைத்து அரசாங்கப் பரீட்சைகளிலும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் மத்தியில் பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து வருகிறனர் எனவும் அதிபர் மில்ஹான் மேலும் தெரிவித்துள்ளார்.