முகம்கொடுக்கும் ஏழு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சுகாதார பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சில இன்று (27) காலை முதல் 5 மணித்தியால பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தில் சுமார் 44 தொழிங்சங்கங்கள் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன எனினும் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிந்திராமல் வைத்தியசாலைகளுக்கு வருகை தந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது
தொழிற்சங்க செயங்பாடுகளில் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தொடர்புப்படவில்லையென சங்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்ததேரர் தெரிவித்தார்.
நாட்டின் சில வைத்தியசாலைகளில் பணிகள் வழமைபோன்று இடம்பெற்றுள்ளமாகவும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் நிலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலயில் இவ்வாறாக தொழிற்சங்க நடவடிக்கைகளால் அதிகளவான அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.