crossorigin="anonymous">
உள்நாடுபொது

நோய் எதிர்ப்பு சுதேச மருந்து பொதி அதிகாரபூர்வமாக பிரதமரிடம் வழங்கி அறிமுகம்

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ (ஆரோக்கிய பூமி) சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி  பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் இன்று (28) அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி அவர்களினால் அதிகாரபூர்வமாக இந்த ‘சுவ தரணி’ மருந்துப் பொதி  பிரதமரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்திற்கு அமைய பயணித்து ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் உன்னத நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான இந்த ‘சுவ தரணி’ (ஆரோக்கிய பூமி) சுதேச மருந்துப் பொதியானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ பானம், மருத்துவ கஞ்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

சுதேச மருந்துப் பொதிகளை முதல் கட்டமாக நாடு முழுவதும் அமைந்துள்ள சகல வழிபாட்டு தலங்களுக்கும், இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் மற்றும் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: