சீன நிறுவனத்தால் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட சேதனப் பசளை மாதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா (Erwinia) கண்டுபிடிக்கப்பட்டமை காரணமாக அதன் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து குறித்த சேதனப் பசளையை இறக்குமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளையை இந்நாட்டுக்கு கொண்டுவரும் விலைமனு கோரலைப் பெற்ற சீன நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட பசளை மாதிரி, விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அர்வீனியா (Erwinia) எனப்படும் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. கிழங்கு, வெங்காயம், கரட் போன்ற மரக்கறிகளின் விளைச்சலை பாதிக்கச் செய்யும் தன்மை இந்த பக்டீரியாவுக்கு உள்ளது.
பாதிப்புக்குரிய பக்டீரியா வகை, இந்த பசளை மாதிரியில் இல்லை என தர நிர்ணய சபை பெயரிட்ட சுயாதீன பரிசோதனைக்கூடம் நடத்திய பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய, விவசாண திணைக்களம் அதனை எவ்வகையிலும் இறக்குமதி செய்யப் போவதில்லையென விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா மேலும் தெரிவித்தார்.