crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மீன்பாடும் தேநாடு மட்டக்களப்பு அழகு மிழிரும் நகரமாக மாற்றும் வேலைத்திட்டம்

மீன்பாடும் தேநாடு மட்டக்களப்பு அழகு மிழிரும் நகரமாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம். ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கிழ் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினை அழகு மிகுந்த நகரமாக மாற்றும் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியம்மன் ஊறணி சந்தியினை அழகு படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (29) ஆரம்பத்து வைக்கப்பட்டது.

நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இனைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.

கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 17.38 மில்லியன் நிதி பங்களிப்புடன் மாநகர சபையின் பங்களிப்புடன் பிரதேச செயலகத்தின் ஒத்துளைப்புடனும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு மாநகர சபைக்கு பராமரிப்பிற்காக கையளிக்கப்படவுள்ளது.

ஆரம்ப விழாவிற்கு கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஜெகத் லியனக்கே மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் மாவட்ட செயலகத்தின் திட்டப்பணிப்பாளர் புண்னியமூர்த்தி சசிகலா பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மின்சார சபையின் மாவட்ட பொறியலாளர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 22 = 26

Back to top button
error: