இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கபபட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் இதனை அறிவித்தார்.
இருப்பினும் இக்காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 03 தினங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும்.
வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக நாளையும், மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 04 மே திகதி ஆகிய மூன்று தினங்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணிவரையில் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியே சென்று வர்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களிலும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் எவருக்கும் வாகனங்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப் பகுதியில் சில்லறை கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும்
அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.