கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது என்பதுடன் 2020 க. பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு பெற்றவர்களுக்கான கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பின் “கல்வி ஊக்குவிப்பு வாரம்” இடம்பெறவுள்ளது
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய உயர் தரத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் போதிய சித்தியை பெறாத மாணவருக்கு “வெற்றியை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது
நிகழ்ச்சியை இம்முறை “கல்வி ஊக்குவிப்பு வாரம்” என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து 5 நாட்களுக்கு zoom வழியாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு துறைக்கும் பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நிகழ்ச்சி ஏற்பாடுகள் பின்வரும் ஒழுங்கு நடைபெறவுள்ளது.
முதல் நாள் (10.10.2021) – உங்களுக்கு விருப்பமான துறை எது என்பதை கண்டறிவதற்கான நுட்பங்கள், உயர்தரம் தெரிவானவர்கள் அடுத்த இரண்டாண்டுகளை கல்விக்காக திட்டமிடுவதற்கான வழிகாட்டல்கள்
இரண்டாவது நாள் (11.10.2021) – கலை மற்றும் வர்த்தகப்பிரிவு பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.
மூன்றாவது நாள் (12.10.2021) – விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு தொடர்பான வழிகாட்டல்கள்
நான்காவது நாள் (13.10.2021) – தொழில் நுட்பப் பிரிவு மற்றும் கல்வியல் கல்லூரிக்கு தயாராகுதல் தொடர்பான வழிகாட்டல்கள்.
ஐந்தாவது நாள் (14.10.2021) – உயர் தரம் கற்க போதிய பெறுபேறு இல்லை என்பது உயர்கல்வி பெற தடையல்ல என்ற தலைப்பிலான வழிகாட்டல்கள், 13 வருட கட்டாயக் கல்வித் திட்த்தின் முக்கியத்துவம், தொழிநுட்பத் துறைகளில் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியாக இருக்கின்ற வாய்ப்புக்கள்.
தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந் நிகழ்ச்சிகளில் இலங்கையில் எந்தப் பகுதியிலிருந்து நிகழ்ச்சியில் zoom ஊடாக இணைந்து பயன்பெறலாம்.
இணைந்து கொள்ள விரும்புகின்ற மாணவர்களும், பெற்றோரும் மேலதிக தகவல்களுக்கு 0773509609 / 0740069101 அழைக்க முடியும்.