இலங்கையில் ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் வரையிலும், 13.306 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவிதது.
கடந்த ஜூலை மாதமே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 2,349 ஆகும்.
இந்த வருடம் ஆரம்பம் முதல் இதுவரையிலும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எண்ணிக்கை 3,224 ஆகும்.
கொழும்பு மாநகரப் பகுதியில் மாத்திரம் 904 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 1,329 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,046 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,999 பேரும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் மாதம் முதல் மற்றும் இறுதி வாரங்களில் டெங்கு நோய் அதிகம் பரவும் நிலை இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.