crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மன்னார் மாவட்ட கொரோனா தடுப்பூசி நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வரை 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியும், 63,222 நபர்கள் 2வது தடுப்பூசியும் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (08) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. -20 வயதிற்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

2வது தடுப்பூசியை 63,222 நபர்கள் பெற்றுள்ளனர். 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடை விலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகின்றது.

அதற்கு அடுத்தபடியாக 18,17,16,15 என்ற வயது அடிப்படையில் குறித்த தடுப்பூசி வழங்கப்படும்.இவர்களுக்கு ஒரு பைஸர் தடுப்பூசியே வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் வாரம் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடை விலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 + = 63

Back to top button
error: