crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு – நெத்தலிஆறு கிராமத்தில் காட்டு யானை தொல்லை

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பிரதேசத்திற்கு உட்பட்ட நெத்தலிஆறு கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் விவசாயத்துறை சார்ந்த வாழ்வாதார பயிர்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளால் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

நாச்சிக்குடா நெத்தலி ஆற்றினை அண்டி வாழும் குடும்பங்கள் மிகவும் கஸ்ரப்பட்டு விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்றிரவு அதற்கு முன்னரான நாட்களில் தொடர்ச்சியாக காட்டுயானைகள் விவசாயத்தினை அழித்து வருகின்றன.

குறிப்பாக மூன்று யானைகள் மாலை வேளையில் நெத்தலி ஆற்றினை அண்டிய கிராம பகுதிகளுக்குள் நுளைந்து விளைபயிர்களை நாசம் செய்து வருகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னம்பிள்ளைகள், மரவள்ளி செடிகள் மாட்டின் உணவிற்காக விலைக்கு வாங்கி நாட்டப்பட்ட புல்லு செடியினையும் யானை விட்டுவைக்கவில்லை. யானைவேலி இதுவரை போட்டு தராத காரணத்தினால் மீள்குடியேற்றத்தில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக காட்டுயானையின் அழிவால் வாழ்வாதாரத்தினை இழந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

யானை வேலி அமைத்து தர பல்வேறு கோரிக்கை விடுத்தும் இதுவரை யானை வேலி அமைக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் யானையால் மக்களின் உயிரிற்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

யானைக்கு வெளிச்சம் காட்டி தகரத்தில் தட்டியும் யானை போகாத நிலையில் விவசாயிகளை நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்கள். நாட்டில் பசளை பிரச்சினை, பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வாதாரமாக மேற்கொண்ட மேட்டுநில பயிர்களை அழித்துள்ளன. இதனால் பல குடும்பங்களுக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 4 =

Back to top button
error: