இலங்கையிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இதற்காக, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பூஸ்டர் (மிகை பாதுகாப்பு) டோஸாக (Booster Dose) அமெரிக்க உற்பத்தியான Pfizer-BioNTech இனை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.