பால் மாவை இன்று (11) முதல் சந்தைக்கு விற்பனைக்கு விட முடியுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மா தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஷ்மன் வீரசூரிய:
புதிய விலைகளின்படி 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு கிலோ பால் மாவின் விலை 1195 ரூபாவாகவும் அதேவேளை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள 400 கிராம் பால் மா பக்கற் 480 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.
அதேவேளை தேசிய உற்பத்தியான பால் மாவின் விலைகளையும் அதிகரிக்கப் போவதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்துச் செல்வதையடுத்து தேசிய உற்பத்தியான பால் மாவிலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசேகர தெரிவித்துள்ளார்.