crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இலங்கை வருகிறார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நாளை (12) இலங்கை வருகை தரவுள்ளார்.

இலங்கையில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் விஷேட அழைப்பின் பேரில் நாளை இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவுடன் அவரது பாரியார் வீணா நரவானே, இந்திய இராணுவ தலைமையக பயிற்சி பிரிவின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இராணுவ உதவியாளர் மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், மற்றும் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன் ஆகியோர் அடங்கிய குழுவினரே வருகை தரவுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 + = 70

Back to top button
error: