crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 15 ஆம் திகதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை, எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கோரி, குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அடிப்படை உரிமை மனு இன்று (12) விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இதன்போது, குறித்த மனுவை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: