crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் நரவானே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று (12) இலங்கை வருகை தந்துள்ளார்

ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அக்குரேகொடை பாதுகாப்புத் தலைமையகத்திலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு நாளை (13) விஜயம் செய்யும் இந்திய இராணுவத் தளபதிக்கு விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளதுடன் இரு நாட்டு இராணுவ தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்யும் இந்திய தளபதி இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் விஷேட கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 50 = 59

Back to top button
error: