இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பிரதமரின் பாரியார் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்
கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது