இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்றது.
பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியம் சுவாமி அவர்கள், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.
பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியம் சுவாமி அவர்கள், பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி அவர்கள் பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.
சுப்ரமணியம் சுவாமி அவர்கள் இம்முறை இலங்கை விஜயத்தின்போதும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.