முல்லைத்தீவு மாணவிகள் கட்டுரை போட்டியில் கௌரவிப்பு
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாதிக அம்ரித்மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய துணைக் தூதரகம் வடக்கு மாகாண கல்வி கலாச்சார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலுள்ள மாணவர்களிற்கு இணைய வழியூடாக கட்டுரை போட்டியொன்றை நடாத்தியது.
இப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் 13இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கட்டுரை போட்டியில் முதலாமிடத்தினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான செல்வி சுப்பிரமணியம் சுடர்ச்செல்வியும், இரண்டாமிடத்தினை மல்லாவி யோகபுரம் மகாவித்தியாலய மாணவியான செல்வி மயில்வாசன் தினேகாவும், மூன்றாமிடத்தினை உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியான செல்வி சசிக்குமார் ஷர்மிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கௌரவிப்பு விழா நேற்று (13) முல்லை வலயத்தில் இடம்பெற்றதுடன் இதன்போது குறித்த மூன்று மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் ஐயாயிரம் ரூபா பணம் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.