crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (14) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் தொடரப்பட்ட வழக்கு, இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது

தலா ரூ. 50 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிஐடியில் முன்னிலையாக வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டு, வெளிநாடு செல்ல தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைதான ரிஷாட் பதியுதீன் எம்.பி சுமார் 6 மாதங்களின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ரிஷாட் பதியுதீனின் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணை நாளை (15) இடம்பெறவிருந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − = 63

Back to top button
error: