crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலாத்துறைசார் சந்தைப்படுத்தல் கலந்துரையாடல்

வட மாகாண சுற்றுலா துறையினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா துறை சார்ந்த சந்தைப்படுத்தல் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக The Real North இனால் முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்பு முயற்சிகள் தொடர்பான நிகழ்வு நேற்று முன்தினம் (13) மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூர் உற்பத்திகளை சுற்றுலா துறையுடனான விடுதிகளில் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கருத்துக்கள் கலந்து கொண்ட சுற்றுலா துறை சார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு முன்வைக்கப்பட்டது.

இதன்கீழ் பயிற்சி பெற்ற உள்ளூர் உற்பத்தியாளர்களின் கைவினை பொருட்கள் அடங்கிய விளம்பர அட்டைகள் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்துரைத்த மாவட்ட அரசாங்க அதிபர் : சுற்றிலா துறையினை ஊக்குவிக்கின்ற பொருட்களை இங்கு உற்பத்தி செய்வதனூடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அத்தகைய பொருட்களூடாக அடையாளப்படுத்துகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனூடாக எமது மாவட்டத்தை அடையாளப்படுத்த முடியும். இதற்காக நீங்கள் பெற்றுக் கொண்ட பயிற்சிகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 1

Back to top button
error: