இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் எகப்பலிலிருந்து கடலில் விழும் இரசாயன பொருட்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய கரையோரப் பகுதிகளுக்கு வரக்கூடும் என்பதனால் இவ்வாறான பொருட்களை தொடவோ அல்லது திறக்கவோ முயற்சிக்க வேண்டாம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த கப்பலின் முன் பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள பின் பகுதிக்கும் பரவி இருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது.
தீயை அணைப்பதற்கு இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான சமுத்திர சுற்றாடல் பாதிப்பை தவிர்க்கும் மற்றும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு கப்பல்நேற்றி ரவு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரித்து உள்ள இடத்தை வந்தடைதுள்ளது.
தீயணைப்பு அதற்காக பயன்படுத்தப்படும் இரசாயன மற்றும் எரிபொருள் பாதிப்புகளை தவிர்க்கும் இரசாயனபொருட்கள் அடங்கிய ஒரு விமானமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் கொந்தளிப்பு காணப்படுகின்றது. இதனால் இந்த கப்பல் தெற்கு பக்கமாக சாய்ந்து உள்ளது. இதன் காரணமாக கப்பலில் கொள்கலன் கடலில் சாய்ந்துள்ளது. இதில் ஒரு பகுதி கடலில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.