பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மர்ம நபரால் படுகொலை
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டன் எம்.பி. டேவிட் அமெஸ். அவருக்கு வயது 69. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் நேற்று (15) எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்தித்தார்.
அப்போது திடீரென ஒரு மர்ம நபர் டேவிட் அமெஸை கத்தியால் குத்தினார். பலமுறை அவரைத் தாக்கினார்.
இதில் டேவிட் அமெஸ் படுகாயங்களுடன் சரிந்து விழுந்தார். சற்று நேரத்தில் அப்பகுதிக்கு வந்த போலீஸார் அந்த மர்ம நபரைக் கைது செய்தனர். அந்த நபருக்கு 25 வயது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழு டேவிட் அமெஸுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது. ஆனால், அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(இந்து)