crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசியப் பட்டியல் எம்.பி. யான அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

அபே ஜனபல கட்சியின் (எமது மக்கள் கட்சி) தேசியப் பட்டியல் எம்.பி. யான அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (15) இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்.பி. பதவி தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறித்த பதவிக்கு வர ஞானசார தேரர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 − = 68

Back to top button
error: