crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு மாநகர சபை ஏற்பாட்டில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விஷேட வைபவம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் விஷேட வைபவம் ஒன்று நேற்று (17) ஞாயிற்றுக் கிழமை மாலை மாநகர சபையின் பிரதி மேயர் எம் இக்பால் தலைமையில் மாநகர சபையின் முன்றலில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தாரர்.

மாநகர சபையின் உறுப்பினர்கள், பௌத்த சமய தலைவர்கள் உள்ளிட்ட பலர் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மநாகர முன்றலில் மீலாத் நிகழ்வை ஞாபகமூட்டும் வகையில் விஷேட மின்னொளி அலங்காரத்தையும் மாநகர மேயர் ரோசி சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார்.

பல்லின சமுகம் வாழும் இந்த நாட்டில் அந்தந்த சமுகங்களின் சமய விழுமியங்களை கௌரவிக்கும் வகையில் மாநகர சபையினால் விஷேட நிகழ்வுகளும் மின் அலங்கார ஒளியேற்றல் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த வருடங்களைப்போல் இந்த முறையும் கொழும்பு மாநகர சபையின் முன்னறில் விஷேட மின்னொளி அலங்காரம் ஏற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 − = 42

Back to top button
error: