உள்நாடுபிராந்தியம்
புத்தளம் நகர சபையில் முன் பள்ளி ஆசிரியைகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு
புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் புத்தளம் நகர சபை எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட முன் பள்ளி ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (18) காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இம்மாதம் எதிர்வரும் 25ம் திகதியளவில் முன்பள்ளிகள் திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்
வருகை தந்த ஆசிரியைகள் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தமக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய நகரபிதாவுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
இலங்கையிலேயே முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கூடிய மாதாந்த கொடுப்பனவு வழங்குவது புத்தளம் நகரசபையே என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன், நகரசபை செயலாளர் மற்றும் சமூக அபிவிருத்திப் பிரிவு உத்தியோத்தர்களும் கலந்துகொண்டனர்.