இலங்கையில் வருடாந்தம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு தேசிய ரீதியாக நடாத்தப்படுகின்ற தேசிய மீலாத் தின விழாவானது இவ்வருடம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான தேசிய மீலாத் தின விழாவை நடாத்த நுவரெலியா மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு 28 பள்ளிவாசல்களில் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந் நிலையில் கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலரது பங்குபற்றதலுடன் 2021.10.19 ஆம் திகதி மாலை 04.30 மணிக்கு மீலாத் விழா சுகாதார வழிகாட்டலிற்கமைவாக அலரி மாளிகையில் நடைபெற்றது.
தேசிய மீலாத் தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றும் இங்கு வெளியிடப்பட்டது. அதற்காக ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாயலின் புகைப்படம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதி அமைச்சர் அலி சப்ரி (PC),MP அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவர்கள் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தனர்.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஷபக்ஷ அவர்கள் பங்குபற்றியதோடு, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்கள், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதப்பெரியோர், பிரதமரின் இணைப்பு செயளாளர்கள், இலங்கை வக்பு சபை மற்றும் ஹஜ் குழு தலைவர்கள், புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சின் சமய விவகாரங்களுக்கான மேலதிக செயளாளர், திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹீம் அன்சார், உதவிப் பணிப்பாளர்களா்கள் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.