crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய 32 பொலிஸாசாருக்கு கொவிட்19 தொற்று உறுதி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) புதன்கிழமை மேற்கொண்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நேற்றைய தினம் (25) மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொவிட்19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 81 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையிலேயே 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை குறித்த தினத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்துவந்த 16 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 06 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை சிகிட்சைகளுக்காக கொவிட் சிகிட்சை நிலையங்களுக்கு
அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்களில் 36 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டுள்ளமையினால், பொலிஸ் நிலையத்தில் சுத்திகரிப்பு மேற்கொண்டு மேலதிக பொலிசார் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்டு பொது மக்களிற்கான சேவை தங்குதடையின்றி இடம்பெறுமென பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − = 56

Back to top button
error: