crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்தியா – குஷிநகர் விமான நிலைய துவக்க விழாவில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ

இந்தியா – உத்திர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று (20), திறந்து வைத்ததுடன் இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்கள் இலங்கை அரசாங்கத்தையும், இலங்கை மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்.

இந்த விமான நிலையம் ஆனது, பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் துவக்க விழாவானது இலங்கையின், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச் சின்னங்களை கொண்டு சென்ற விமானம் தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.

புராதன நகரமான குஷிநகர், கெளதம புத்தரின் இறுதி ஓய்வு இடமாகும்.அங்கு அவர் இறந்த பிறகு மஹாபரிநிர்வாணம் அடைந்தார்.

இந்த நிகழ்வின் ஓர் சிறப்பு அம்சமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான – ‘பகவத்கீதை’யின் மும்மொழி வெளியீட்டு நூலின் முதற் பிரதி அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்களினால், இந்தியப் பிரதமர் மோதி அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: