இந்தியா – உத்திர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை, இந்தியப் பிரதமர் மோடியினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இலங்கை அரசாங்கத்தையும், இலங்கை மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்.
இந்த விமான நிலையம் ஆனது, பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் துவக்க விழாவானது இலங்கையின், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச் சின்னங்களை கொண்டு சென்ற விமானம் தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.
இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம், ரூ. 260 கோடி இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்ப்பட்டுள்ளது.