‘முல்லைத்தீவு ஊடக அமைய’த்துக்கான அலுவலகம் பி.எம்.டி வீதி, முல்லைத்தீவு என்னும் முகவரியில் இன்று (20) புதன் கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட திறப்பு விழாவானது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி எஸ் ரகுராம் அவர்கள், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததை தொடர்ந்து அலுவலக கட்டிடத்தினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் யாழ் ஊடக அமைய நிறுவுனர் ரத்தினம் தயாபரன் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஊடக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிடோர் பலர் கலந்து கொண்டனர்.