crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஒக்டோபர் 21, 22 பாடசாலைகளுக்கு சமூகமளிக்க போவதில்லை : ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க முன்னணி

ஒக்டோபர் 25 முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, ஒக்டோபர் 21 வியாழக்கிழமை மற்றும் ஒக்டோபர் 22 வெள்ளிக்கிழமை திகதிகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்

இலங்கை 200 இற்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒக்டோபர் 21 இல் அல்லாது, ஒக்டோபர் 25 முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் 25 ஆம் திகதி பாடசாலைகளுக்கு தாங்கள் சமூகமளித்தபோதிலும், தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தாங்கள் அரசாங்கத்திற்கு பயந்து குறித்த முடிவை எடுக்கவில்லையெனவும், மாணவர்களின் நலன் கருதி, அரசாங்கம் தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான இம்முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக, தொழிற்சங்கங்கள் இதன்போது சுட்டிக்காட்டின.

இலங்கையில் 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) வியாழக் கிழமை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 52

Back to top button
error: