இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
1. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்,
2. குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதி,
3. இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம்,
4. தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.
பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய “நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரங்கள் வழங்குவது தொடர்பான தற்போதுள்ள பிரச்சினைகள்” தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.