இலங்கையில் முதல் தடவையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (21) அதிகாலை பிரசவித்துள்ளார்
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவருக்கே , ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை சிசேரியன் மூலம் குழந்தைகள் இன்று அதிகாலை 12.16 முதல் 12.18 மணி வரை பிறந்துள்ளன.
31 வயதான தாய் ஒருவரே 3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
இவற்றில் இரண்டாவதாகப் பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள தாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல் தெரிவித்துள்ளன.