கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினர் மகளீரணியினரால் முள்ளியவளை பிரதேசத்தில் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாமொன்று நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட மகளீர் அமைப்பு மக்களுக்காக பல்வேறுபட்ட நலத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக சிச்சிராபுரம் வட்டாரத்தில் பொதுநோக்கு மண்டபத்தில் குறித்த நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாமினை கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சண்முகராசா, ஆயுர்வேத மருத்துவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
மருத்துவ முகாமினால் இருநூறுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளதுடன், இனிவரும் காலங்களில் வட்டாரங்கள் தோறும் இத்தகைய நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம்களை முன்னெடுக்கவுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்திருந்தார்.