crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தாய்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் கொரோனா விழிப்புணர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் மக்களுக்கான கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய்த்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் தொடக்க நிகழ்வு இன்று (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த மக்கள் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் துண்டுப்பிரசுரம் மற்றும் முகக்கவசம் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு கருத்துகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, 68வது படைப் பிரிவின் அதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.றெஜினோல்ட், புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் தயானந்தறூபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர், வணிகர் சங்கத் தலைவர் நவநீதன், பொதுச் சுகாதார பரிசோதகர், ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் உள்ளிட்ட தாய்த்தமிழ் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: