crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேச செயலக பிரிவில் வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (25) மூதூர் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அதன் மூலமாக கிராம மக்களுடைய வருமானத்தை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்தார்.

உற்பத்திசார் விடயங்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்படுவதுடன் அவற்றுக்கான நிதி உதவிகள் உட்பட ஏனைய உதவிகளையும் தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் நிதியமைச்சர் இது தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான நிமல் காமினி ஹேவாவிதாரண, ஆரியவதி கலபதி, மூதூர் பிரதேச செயலாளர் எம் .பி .எம் .முபாரக், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், கிராம முன்னேற்றச் சங்கம் மற்றும் ஏனைய சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 + = 16

Back to top button
error: