crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளின் நலன் விசாரித்த பிரதமரின் பாரியார்

இலங்கை பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் நேற்று (25) நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், நைன்வெல்ஸ் மருத்துவமனையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் திரு.சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டார்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.

பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: