இலங்கையில் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (25) தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில், இடம்பெற்ற LANKAQR இன் நாடு தழுவிய வெளியீட்டு நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
LANKAQR ஆனது, அனைத்து QR குறியீடுகள் மற்றும் QR அடிப்படையில் இலங்கையில் மேற்கொள்ளக் கூடிய பரிவர்த்தனைகள், உரிய தரத்தின் கீழ் மேற்கொள்வதனை, இலங்கை மத்திய வங்கி ஒருங்கிணைத்து உறுதிசெய்வதற்கான திட்டமாகும்.
டிஜிட்டல் பணம் அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது இவை அனைத்துக்கும் முன்னர், பணத்தை பயன்படுத்தாத பொருளாதாரத்தை நோக்கி செல்ல தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.