வெளிநாடுகளிலிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு புதிய இணைய முறையொன்று 26) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வர விரும்பும் பயணிகள் அந்த நாட்டு விமானத்தில் அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் போது airport.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்த அமைப்பை அணுக முடியும் அல்லது விமான நிலைய வருகை வளாகத்தில் அமைந்துள்ள QR ஊடாக குறியீட்டு பலகைகளுக்குச் சென்று உங்கள் தகவலைச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 72 மணித்தியாலங்களுக்கு முன் பெறப்பட்ட PCR பரி சோதனை அறிக்கை மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தடுப்பூசி அட்டை ஆகியவற்றை இந்த அமைப்பின் மூலம் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது சந்திக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இந்த வழிமுறை மூலம் தங்களின் ஆவணங்களை முன்வைப்பதுடன் பயணிகள் விரைவாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.
பயணிகள் வரிசையில் நிற்பது, ஆவணங்களை நிரப்புவது அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்புவது ஆகியவற்றின் தேவை இனி இருக்காது எனத் தெரியவந்துள்ளது.