crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நியமனம்

இலங்கையில்  பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரைக் கொண்ட ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையினுள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கபபட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல் இந்த செயலணியின் பிரதான பணிகளாகும்.

ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 − 85 =

Back to top button
error: