crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவ வசமிருந்த 11 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 7ம் வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள இதுவரை இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிலப்பிட்டிய உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களிடம் இன்று (28) கையளித்துள்ளார்.

68ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந், காணிக் கிளை அதிகாரிகள், கிராமசேவையாளர் மற்றும் 68 ஆவது படை அதிகாரிகள் ஆகியேர் கலந்து கொண்டுள்ளார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 6 = 13

Back to top button
error: