crossorigin="anonymous">
உள்நாடுபொது

தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை நேற்று (28) சபாநாயகர் சான்றுரைப் படுத்தினார்

பாராளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 26ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார்.

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக எவரேனும் ஆளினால் தவறொன்று புரியப்பட்ட நேரத்தில் 18 வயதிற்குட்பட்ட அத்தகைய ஆளுக்கெதிராக மரணதண்டனைத் தீர்ப்பளிப்பதற்குப் பதிலாக அவரைத் தடுத்துவைத்தல் நிறுவனம் ஒன்றில் தடுத்து வைப்பதற்கும் ஏற்பாடு செய்வதாக அமையும்.

இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ‘இளம் ஆள்’ சொல்லமைப்பை பதினெட்டு வயதை அடைந்துள்ளவரும் இருபத்தியிரண்டு வயதை அடையாதவருமான ஆள் ஒருவராக மீளவரையறுப்பதாக அமையும்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 24ஆம் இலக்க இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டு 25ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் ஆகியன கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: