crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி மாவட்ட அக்கராயன் குளத்தில் 2 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) மற்றும் வடக்கு மாகாண சபையும் இணைந்து கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு என 2 லட்சம் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு இன்றைய தினம் (29) ​இடம் பெற்றது.

கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதேவேளை நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் மேற்படி செயற்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கான இறால் குஞ்சுகள் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மற்றும் மாவட்டச்செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ,வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மன்னார் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் அக்கராயன் நன்னீர் மீன்பிடி சங்கத்தின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 69 = 71

Back to top button
error: