crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தயாராகிறாரா?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபசவினால் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து திருப்திக்கொள்ளாத நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படுகின்றமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும், தனக்கு அறிவிக்காமலேயே இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அலி சப்ரி, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியவுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க நீதி அமைச்சர் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: